இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்துக்கிடையே இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 159 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 61 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. 10 மாத இடைநிறுத்தத்துக்குப் பிறகு வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவைத் தொடர்ந்து, சீனப் பொருளாதாரம் மீதான உயர்ந்த கவலைகளும், அமெரிக்க மத்திய வங்கியின் சாத்தியமான வங்கி வட்டி விகித உயர்வு பற்றிய கவலைகளும் சந்தையில் எதிரொலித்தன. இதனால், காலை வர்த்தகத்தில் பெரும்பாலான நேரம் சந்தை சரிவில் இருந்தது. ஆனால், வர்த்தக நேரம் முடியும் முன்னணி பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக ஐடி, ஆட்டோ, வங்கி, நிதி நிறுவனங்கள், மெட்டல், ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தன. இது சந்தை நேர்மறையாக முடிவதற்கு உதவியது. அதே சமயம், மீடியா,
ஃபார்மா பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் வரலாற்றுச் சாதனை அளவுக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.01 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.293.51 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ.1,030.90 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 8.47 புள்ளிகள் கூடுதலுடன் 63,176.77-இல் தொடங்கி 62,801.01 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 63,440.19 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 159.40 புள்ளிகள் உயர்ந்து 63,168.30-இல் முடிவடைந்தது.
18 பங்குகள் விலை உயர்வு:
சென்செக்ஸ் பட்டியலில் 18 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,166 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 887 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 36 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா மோட்டார்ஸ் 3.10%
ஹெச்சிஎல்டெக்வ் 2.69%
பவர் கிரிட் 2.45%
டெக் மஹிந்திரா 1.28%
என்டிபிசி 1.00%
ஆக்ஸிஸ் பேங்க் 0.90%
சரிவைக் கண்ட பங்குகள்
பஜாஜ் ஃபைனான்ஸ் 1.86%
பஜாஜ் ஃபின் சர்வ் 1.35%
சன்பார்மா 0.96%
எம் அண்ட் எம் 0.51%
மாருதி 0.32%
அல்ட்ரா டெக் சிமெண்ட் 0.31%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


