பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு!!
வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.


வாரத்தின் கடைசி நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
பங்குச்சந்தைகள் நேற்று(வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்த நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கின.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று வர்த்தக முடிவில் 899.62 புள்ளிகள் உயர்ந்து 59,808.97 என்ற புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 272.45 புள்ளிகள் அதிகரித்து 17,594.35 புள்ளிகளில் முடிந்தது.
அதானி நிறுவனம், ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...