தொடர் ஏற்றத்தில் தங்கம்! இன்றைய நிலவரம்

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.2,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ரூ.52,000-ஐ தொட்டு நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், இன்று காலை புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.6,545-க்கும், ஒரு சவரன் ரூ. 52,360-க்கு விற்பனையாகிறது.

செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவையுடன் சேர்த்து ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.54,000-க்கும் மேல் விற்பனையாகிறது.

இந்நிலையில், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.84-க்கும் ஒரு கிலோ ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com