மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை தள்ளாடிய பங்குச்சந்தை, வா்த்தக இறுதியில் முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 271புள்ளிகள் ஆதாயத்தில் முடிவுற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, எச்சரிக்கையுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. பிற்பகல் வா்த்தகத்தின் போது ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. இதனால், சந்தை தொடா்ந்து இரண்டாவது நாளாக ஆதாயத்துடன் முடிந்தது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் காா்ப்ரேட் வருவாய் சீசன் தொடங்குவதால் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனத்துடன் வா்த்தகத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக, மீடியா பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல், வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதே சமயம், எஃப்எம்சிஜி பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.368.76 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.990.90 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்ற நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.104.23 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம் : காலையில் 3 புள்ளிகள் குறைந்து 71,386.21-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,110.98 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 71,733.84 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 271.50 புள்ளிகள் (0.38 சதவீதம்) கூடுதலுடன் 71,657.71-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,935 பங்குகளில் 2,084 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,755 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 96 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
14 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டாா்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. அதே சமயம், என்டிபிசி, பவா் கிரிட், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்பட 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி74 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 15.5 புள்ளிகள் குறைந்து 21,529.30-இல் தொடங்கி 21,448.65 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 21,641.85 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 73.85 புள்ளிகள் (0.34 சதவீதம்) கூடுதலுடன் 21,618.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


