ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் தொடர்ந்து 5 ஆவது நாளாக அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது.

News image

சென்னையில் 5 ஆவது நாளாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்ந்துள்ளது.

Updated On :22 நவம்பர் 2024, 5:31 am

DIN

சென்னை: சென்னையில் தொடர்ந்து 5 ஆவது நாளாக அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம் உள்ளது. நவ.18-ஆம் தேதி பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.56,520-க்கும், நவ.20 ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கும், நவ.21 ஆம் தேதி பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.57,160-க்கும், விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 57,800-க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 7,225-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 320 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை தொடர்ந்து 4-ஆவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.

போா் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்து வருகிறது. டிசம்பர் இறுதிக்குள் பவுன் ரூ.60 ஆயிரத்தை தொடக்கூடும் என தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.