கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை: ஐடி துறை பங்குகள் உயர்வு!

ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் ஏற்றம் கண்டன.

News image
கோப்புப் படம்
Updated On :10 அக்டோபர் 2024, 1:14 pm

DIN

வர்த்தக நேர முடிவில் பங்குச் சந்தை வணிகம் ஏற்றத்துடன் முடிந்தது. ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் ஏற்றம் கண்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.30 புள்ளிகள் உயர்ந்து 81,611.41 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.18% உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டி எண் நிஃப்டி 16.50 புள்ளிகள் உயர்ந்து 24,998.45 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. மொத்த வணிகத்தில் இது 0.066% உயர்வாகும்.

வணிக நேரத் தொடக்கத்தின்போது 535.74 புள்ளிகள் சரிந்து 81,538.94 என்ற நிலையில் சென்செக்ஸ் இருந்தது. எனினும் வணிக நேர மத்தியில் 82,002.84 புள்ளிகள் வரை உயர்ந்தது. இது இந்த நாளின் அதிகபட்ச உயர்வாகும். வணிக நேர முடிவில் 144 புள்ளிகள் உயர்ந்து 81,611 புள்ளிகளாக நிலைப்பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக கோட்டாக் வங்கியின் பங்குகள் 4.19% வரை உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக எச்டிஎஃப்சி வங்கி 1.80%, மாருதி சுசூகி 1.44%, பவர் கிரிட் 1.40%, எம்&எம் 1.31%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 1.30%, ஆக்சிஸ் வங்கி 1.21%, இந்தஸ்இந்த் வங்கி 1.11%, என்டிபிசி 1.02% உயர்ந்திருந்தன.

இதேபோன்று டெக் மஹிந்திரா -2.36%, சன் பார்மா -2.24%, இன்ஃபோசிஸ் -1.73%, டைட்டன் கம்பெனி -1.33%, டாடா மோட்டார்ஸ் -1.14%, எல்&டி -0.77%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.65%, டிசிஎஸ் -0.61%, ரிலையன்ஸ் -0.26% சரிந்தன.

வணிக நேர தொடக்கத்தில் 25,067.05 புள்ளிகளாக நிஃப்டி இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 25,134.05 எண்ர இன்றைய உச்சத்தை எட்டியது. இதேபோன்று அதிகபட்சமாக 24,979.40 புள்ளிகள் வரை சரிந்தது.

நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் அதிகபட்சமாக ஏபிபி பவர் நிறுவனத்தின் பங்குகள் 10.20% உயர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து டிபி ரியாலிடி 9.91%, மாஸகான் 8.36%, ராஷ்ட்ரியா கெமிக்கல் 6.82%, குஜராத் ஃபுளூரோகெமிக்கல் 6.76%, டாடா டெலிசர்வீசஸ் 5.77%, டாடா இன்வெஸ்மென்ட் 5.72% உயர்வுடன் காணப்பட்டன.

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.37% உயர்ந்தது. ஒரு பேரல் 77.63 அமெரிக்க டாலர்களாக விற்பனையானது.

ஆசிய பங்குச் சந்தையில் உள்ள டோக்கியோ, ஹாங் காங், ஷாங்காய், சியோல் ஆகிய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.