திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மாருதி சுசூகி நிகர லாபம் 18% சரிவு!

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18 சதவிகிதம் சரிவடைந்து ரூ.3,102 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

News image

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம்

Updated On :29 அக்டோபர் 2024, 6:32 pm IST

புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 18 சதவிகிதம் சரிவடைந்து ரூ.3,102 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.3,786 கோடி நிகர லாபம் ஈட்டியது.

செயல்பாடுகளின் மொத்த வருவாய் இரண்டாவது காலாண்டில் ரூ.37,449 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.37,339 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 5.88 சதவிகிதம் குறைந்து ரூ.10,807.50 ஆக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.