
ஏசஸ் நிறுவனம் இரண்டு புதிய மடிக்கணினிகளை (லேப்டாப்) மே 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் ஜி-16 (Asus ROG Strix G16), ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் ஜி-18 ஆகிய இரு புதிய மடிக்கணினிகளை அறிமுகம் செய்கிறது.
தைவானை தலைமையிடமாகக் கொண்ட ஏசஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மடிக்கணினி விற்பனையில் நம்பகத்தன்மை வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவில் இரு புதிய மடிக்கணினிகளை மே 2 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. கேம் பிரியங்களைக் கவரும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள் என்ன?
ஏசஸ் நிறுவனத்தின் மடிக்கணினிகள் பொதுவாகவே காட்சி தளத்தை சிறப்பானதாக்கும் வகையில் என்விடியா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஜிஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 5000 கிராஃபிக்ஸ் புராசஸர்களை பயன்படுத்துகின்றன.
ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரைக்ஸ் ஜி-16 மற்றும் ஆர்ஓஜி ஸ்ட்ரைக்ஸ் ஜி-18 மடிக்கணினிகளில் ஆர்டிஎக்ஸ் 5080 கிராஃபிக்ஸ் புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிகச்சிறப்பான காட்சி தளத்தைக் கொடுக்கும் திறன் கொண்டது. இதனால் கேம் ஆடும்போது புதுவித அனுபவத்தைப் பெற முடியும்.
ஜனவரியில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியில் இந்த இரு வேரியன்ட்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த இரு மடிக்கணினிகளும் 16 அங்குலம் மற்றும் 18 அங்குலம் என இரு வகைகளில் வழங்கப்பட்டுள்ளது. இண்டல் கோர் அல்ட்ரா 9 புராசஸர் கொண்டது.
16GB விடியோ உள் நினைவகமும், 2TB வரை நினைவகத் திறனும் கொண்டது. 90W பேட்டரி திறன் கொண்டது.
இரு மடிக்கணினிகளும் 3 யுஎஸ்பி போர்ட், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ போர்ட், 2.5G இதர்நெட் போர்ட் கொண்டவை.
இதையும் படிக்க | ஏப். 30-ல் அறிமுகமாகிறது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.