புது தில்லி: கடந்த மாா்ச் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 69 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.698 கோடியாக உள்ளது.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 69 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.412 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.11,474 கோடியாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.9,899 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கனரா வங்கி லாபம் 10% குறைவு

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!

என்எஸ்டிஎல் 4வது காலாண்டு நிகர லாபம் 8.4% உயர்வு!

ஐஓபி லாபம் 43% வளா்ச்சி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



