காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

மே 1 முதல் பால் விலையை உயர்த்தும் அமுல்!

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.

Amul Dairy's

Published On :30 ஏப்ரல் 2025, 10:45 pm IST

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கமானது, நாடு முழுவதும் மே 1, 2025 முதல் பாக்கெட் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையில், ஜூன் 2024 முதல் பாக்கெட் பாலின் விலையை அதிகரிக்கவில்லை என்று சுற்றுக்காட்டியுள்ள அமுல், 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

நாளை முதல் 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் பாக்கெட் ரூ.34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.67-க்கும் விற்பனை செய்யப்படும்.

'சக்தி' வகையின் 500 மில்லி பாக்கெட் பால் ரூ.31-க்கும், 500 மில்லி பசும்பால் பாக்கெட் ரூ.29 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப் பால் பாக்கெட் ரூ.73 ஆகவும், ஒரு லிட்டர் 'டாசா' பாக்கெட் ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்படும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.