டிரம்ப் புதிய அறிவிப்பு: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய நிலவரம் பற்றி...
Stock Market Update
பங்குச் சந்தைANI
Published on
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை காலை முதலே உயர்வுடன் வர்த்தகமாகின. இறுதியில், சென்செக்ஸ் 81,000 புள்ளிகளுடனும் நிஃப்டி 24,722.75 புள்ளிகளுடனும் நிறைவுபெற்றது.

இதனிடையே, இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மாலை அறிவித்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச் சந்தை சரிவைக் கண்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் காலை 11.30 மணி நிலவரப்படி 346 புள்ளிகள் சரிந்து 80,672 புள்ளிகளில் வர்த்தகமானது.

இன்போசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இதேபோல், நிஃப்டியும் காலை 11.30 மணி நிலவரப்படி 93 புள்ளிகள் சரிந்து 24,630 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகின்றது.

Summary

The Indian stock market has been trading in a bearish mood since the start of trading on Tuesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com