

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 14 காசுகள் சரிந்து ரூ.86.59 ஆக நிலைபெற்றது.
டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு எதிராக வரி கட்டணங்களை அறிவித்ததால், டாலர் அதன் 109 நிலையிலிருந்து பலவீனமடைந்தது. ஆனால் சீனாவுக்கு எதிராக எந்த கட்டணங்களையும் டிரம்ப் அறிவிக்கவில்லை.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.28 ஆக தொடங்கியது. வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக ரூ.86.28 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.59 புள்ளிகள் வரை சென்றது. இது இறுதியாக ரூ.86.59 ஆக முடிவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான அதன் முந்தைய முடிவை விட 14 காசுகள் சரிவை பதிவு செய்தது.
இதையும் படிக்க: 7 மாத சரிவில் சென்செக்ஸ்: முதலீட்டாளர்களின் ரூ.7 லட்சம் கோடி இழப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.