அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உறுதியான குறியீடுகளால் சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வுடன் முடிவு!

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 205.85 புள்ளிகள் உயர்ந்து 23,163.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image
சித்தரிக்கப்பட்டது | கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2025, 11:56 am

DIN

மும்பை: சர்வதேச சந்தைகளின் உறுதியான போக்குக்கு மத்தியில் ஐடி, மூலதன பொருட்கள் மற்றும் தொழில்துறை பங்குகள் உயர்வால் உற்சாகமடைந்த பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று கிட்டத்தட்ட 1 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 698.32 புள்ளிகள் உயர்ந்து 76,599.73 புள்ளிகளாக வர்த்தகமானது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 631.55 புள்ளிகள் உயர்ந்து 76,532.96 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 205.85 புள்ளிகள் உயர்ந்து 23,163.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

30 பங்குகள் கொண்ட ப்ளூ சிப் பேக்கில் சோமேட்டோ பங்குகள் இன்று சுமார் 7 சதவிகிதம் உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. இதற்கு நேர்மாறாக ஐடிசி ஹோட்டல்கள், பார்தி ஏர்டெல், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை சரிந்து முடிந்தது.

நிஃப்டி குறியீட்டில் டிரென்ட், ஸ்ரீராம் பைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட பங்குகள் 3 முதல் 4 சதவிகிதம் வரை உயர்ந்தது. மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி பங்குகள் 0.5 முதல் 1 சதவிகிதம் வரை சரிந்தது.

பிஎஸ்இ-யில் வர்த்தகம் செய்யப்பட்ட மொத்தம் 2,909 பங்குகளில் 528 பங்குகள் சரிந்தும் 2,311 பங்குகளுக்கு உயர்ந்தும் 70 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமாயின. 14 பங்குகள் 52 வார உச்சத்தையும், 98 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் தொட்டது.

ஆசிய சந்தைகளில் இன்று சியோல் மற்றும் டோக்கியோ சற்று உயர்ந்த நிலையில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.4,920.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.93 சதவிகிதம் சரிந்து 76.77 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.