எம்ஜி நிறுவனம் தனது ப்ரீமியம் எலக்ட்ரிக் சொகுசு காரான எம்9 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் மேக்சஸ் மிஃபா 9 என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் காரை இந்தியாவின் எம்9 இவி என்ற பெயரில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் ஜூலை 21 முதல் எம்9 காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 10 முதல் டெலிவரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
7 சீட்டர் வசதி கொண்ட இந்த காரின் அனைத்து சீட்டுகளுக்கும் ஏர் பேக் வசதி இருக்கின்றன.
90 கேடபள்யூஎச் பேட்டரி ஒற்றை மின்சார மோட்டாருடன் வழங்கப்படுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 548 கி.மீ. செல்லும்.
தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, காரின் இரண்டாவது வரிசைக்கு திரைகள், மசாஜ் செயல்பாடுகளுடன் ஒட்டோமான் இருக்கைகள், ஏசி வென்ட்கள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.
மெட்டல் பிளாக், வெள்ளை நிறம் - கருப்பு ரூஃப், கிரே நிறம் - கருப்பு ரூஃப் ஆகிய நிறங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
சொகுசான பயணத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த காரின் நீளம் 5,270 மி.மீ., 2,000 மி.மீ. அகலம், 2,840 மி.மீ. உயரம்.
டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்பிளே, 360 டிகிரி கேமிரா, ஏர் ஃபில்டர், வயர்லெஸ் சார்ஜர், 13 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்.
முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு வாழ்நாள் பேட்டரி வாரண்டி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சென்னை உள்பட 13 நகரங்களில் 14 டீலர்கள் மூலம் மட்டுமே எம்9 விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 69.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
MG has launched its premium electric luxury car, the M9, in India.
இதையும் படிக்க : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 10: அறிமுக தேதி அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீா் தீ விபத்து

30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ரயில் என்ஜின்: இருவா் காயம்

இந்தியாவில் ‘கிம்ப்டன்’ சொகுசு விடுதி

ரேஞ்ச் ரோவர் கார் விலை ரூ. 75 லட்சம் குறைப்பு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



