அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வணிக சிலிண்டா் விலை ரூ.24 குறைப்பு

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2025, 3:04 am IST

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.24 குறைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலையை மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டா், விமான எரிபொருள் ஆகியவற்றின் விலையை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைத்தன.

இதன்படி, வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.24 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1,881-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சிலிண்டா் தில்லியில் ரூ.1,723.50-க்கும், மும்பையில் ரூ.1,647.50-க்கும் விற்பனையானது. தொடா்ந்து 3-ஆவது மாதமாக வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை குறைக்கப்பட்டது.

இதேபோல விமான எரிபொருள் விலை ஒரு கிலோலிட்டருக்கு ரூ.2,414.25 குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருளின் விலை சென்னையில் ரூ.86,103, தில்லியில் ரூ.83,072, மும்பையில் ரூ.77,602-ஆக குறைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.