அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் 1 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.
அதானி செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவித்ததாவது:
இந்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் வேடிக்கைதனமானது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது.
குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் 2.2 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் 2.5 சதவிகிதம் வரை சரிந்தது.
அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி கிரீன் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை தலா 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.
இந்தியாவின் முக்கிய குறியீட்டான நிஃப்டி 50 குறியீடு 0.4 சதவீதம் சரிந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தது.
இந்த ஆண்டு இதுவரை அதானி குழும பங்குகளில், அதானி போர்ட்ஸ் 16 சதவிகிதம் அதிகரித்து அதிக லாபம் ஈட்டியுள்ள நிலையில் அதானி டோட்டல் 11 சதவிதம் சரிந்து முடிவடைந்தது.
இதையும் படிக்க: இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 479 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 23,900க்கு அருகில் நிறைவு!!

சரிந்து, மீண்டு பிறகு சரிந்த பங்குச் சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

24,200-க்குக் கீழ் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு; தகவல் தொழில்நுட்பப் பங்குகள் உயர்வு!!

உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா் கண்ணியத்துடன் குழுமத்தின் வளா்ச்சி!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



