திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

2025-26ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு!

2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என்றது முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2025, 2:07 pm

கொல்கத்தா: முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியும் 6.4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறையும் என்றுது.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை, நுகர்வோர் விலைக் குறியீடு 3.5 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த விலைக் குறியீடு நடப்பு நிதியாண்டில் 1.8 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும்.

2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதமாக இருக்கும் என்று ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது. அதே காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவிகிதம் முதல் 1.3 சதவிகிதம் வரை இருக்கும் என்றுது.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கணிசமான வருமான வரி நிவாரணம், வட்டி விகிதக் குறைப்புக்கள், இ.எம்.ஐ. மற்றும் உணவுப் பணவீக்கம் குறைந்து, வீட்டு உபயோக வருமானம் அதிகரிக்கும். அதே வேளையில் ஏற்றுமதியில் மந்தநிலை குறுகிய காலத்தில் தொடரும் என்றுது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.