கேம் பிரியர்களுக்கான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன்!

இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்...
Infinix GT30
இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 படம்: infinix website
Published on
Updated on
1 min read

மொபைல் கேம் பிரியர்களுக்காக பிரத்யேக அம்சங்களுடன் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஜிடி 30 மாடல் ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது.

அனைத்து தரப்பினரும் பொழுதுபோக்குக்காக மொபைல் கேமிங்கில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தற்போதும் கேமிங்கை மையமாக கொண்ட சிப்களுடன் போன்களை வடிவமைக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், இன்ஃபினிக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில், சிறந்த கேமிங் அனுபவங்களை கொடுக்கக் கூடிய ஜிடி 30 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • டிஸ்பிளே - 6.78 அங்குல 1.5 கே அமோலெட்

  • கேமிரா - பின்புறம் 108 எம்பி + 8 எம்பி + ஏஐ கேமிரா மற்றும் முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமிரா

  • மீடியாடெக் டைமென்சிட்டி 8,350 அல்டிமேட் புராசசர்

  • 24 ஜிபி ரேம் விரிவு வசதி

  • 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்

  • இரண்டு சிம்கார்டு வசதி

  • 188 கிராம் எடை

  • நிறம் - பிளேடு வெள்ளை மற்றும் டார்க் ஃப்ளேர்

விலை

8 ஜிபி + 256 ஜிபி - ரூ. 24,999

12 ஜிபி + 256 ஜிபி - ரூ. 26,999

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com