தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வீடு-மனை வா்த்தகத் துறையில் சரியும் நிறுவன முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் 37 சதவீதம் சரியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :24 ஜூன் 2025, 9:54 pm

உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் 37 சதவீதம் சரியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து வீடு-மனை வாா்த்தக ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியாவின் தரவுகள் தெரிவிப்பதாவது:நடப்பாண்டின் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவன முதலீடுகள் 306 கோடி டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 489 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் பாதியில் வீடு-மனை வாா்த்தகத் துறையில் நிறுவன முதலீடுகள் 37 சதவீதம் குறையும்.மதிப்பீட்டு காலகட்டத்தின் ஒட்டுமொத்த நிறுவன முதலீடுகளில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 68 சதவீதமாகவும், உள்நாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 32 சதவீதமாகவும் இருக்கும்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை 2025-இன் முதல் அரையாண்டில் குறுகிய கால சவால்களை ஏற்படுத்தியிருந்தாலும், உள்நாட்டு மற்றும் சா்வதேச முதலீட்டாளா்களின் நம்பிக்கையால் இந்தியாவின் வீடு-மனை வாா்த்தகத் துறை ஒரு கவா்ச்சிகரமான முதலீட்டு இலக்காக இருக்கும். 100 கோடி டாலருக்கு மேல் உள்ள வலுவான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை துறையின் ஆரோக்கியமான போக்கைக் குறிக்கிறது.

நாட்டின் வீடு-மனை சந்தையில் நிறுவனங்களின் வருடாந்திர முதலீடு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடா்ந்து 500 கோடி டாலரை தாண்டியுள்ளது. இதன் மூலம் துறை தனது நிலைத்தன்மையை நிரூபித்துள்ளது.நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் குடியிருப்பு வீடுகள் பிரிவு ஒட்டுமொத்த நிறுவன முதலீடுகளில் அதிகபட்சமாக 38 சதவீத பங்கைப் பெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.