37 மடங்கு வலிமைமிக்க உலகின் முதல் எஸ்டி கார்டு! துருப்பிடிக்காத உலோகத்தில்..!

துருப்பிடிக்காத உலோகத்திலான உலகின் முதல் எஸ்டி கார்டு பற்றி...
ஆர்மர் எஸ்டி கார்டு..
ஆர்மர் எஸ்டி கார்டு..
Published on
Updated on
1 min read

துருப்பிடிக்காத உலோகத்தில் உலகின் முதல் எஸ்டி கார்டை லெக்ஸார் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

எஸ்டி கார்டு (SD card) பயன் என்ன?

எஸ்டி கார்டு (SD card) என்பது நினைவகத்தை சேமித்து வைக்கப் பயன்படுகிறது. இது கேமராக்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

இது தரவுகளை சேமித்து வைப்பதற்கும், ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எஸ்டி கார்டு, டிஜிட்டல் கேமராக்கள், விடியோ கேமராக்கள் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக வடிவமைக்கப் பட்டிருந்தாலும், இவை பிளாஸ்டிக்கால் மட்டுமே உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருந்தது.

சிறப்புகள் என்ன?

இதனை மாற்றும் வகையில் முதல் முறையாக துருப்பிடிக்காத உலோகத்தில் லெக்ஸார் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த லெக்ஸார் நிறுவனம் புதிய முயற்சியாக தங்களது சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இரண்டு எஸ்டி கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை Lexar ARMOR GOLD SDXC UHS-II Card மற்றும் Lexar ARMOR SILVER PRO SDXC UHS-II Card.

அதிக செயல்திறனுடன் நீண்டகாலத்துக்கு வரும் வகையில் வலிமையான துருப்பிடிக்காத உலோகத்தில் இந்த எஸ்டி கார்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

37 மடங்கு வலிமை

சாதாரணமாக பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் எஸ்டி கார்டுகளைவிட இந்தவகை எஸ்டி கார்டுகள் 37 மடங்கு வலிமையானவை. தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையான விரைவில் உடைந்து போகும் தன்மை கொண்ட எஸ்டி கார்டுகள் மாற்றாக இவை தொழில்நுட்ப சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த கார்டுகள் ஐபி68 ரேட்டிங்கில் நீர்புகாத் தன்மை, தூசுப் புகாத் தன்மையுடன் வெளியுலகில் எங்கு வேண்டுமானலும் பயன்படுத்தும் வகையில், அதிகம் பயணம் மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ARMOR GOLD மற்றும் SILVER PRO ஆகிய இரண்டு வகை கார்டுகளும் 6k விடியோ வரை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், திரைப்பட கேமராக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

யுஎஸ்பி 3.2 கார்டு ரீடருடன் பயன்படுத்தும் போது இது 280MB/s வரை தரவுகளை பரிமாற்றும் திறன் பெற்றுள்ளது. ARMOR GOLD கார்டு 210MB/s வேகத்திலும், SILVER PRO கார்டு 160MB/s வேகத்திலும் தரவுகளை பரிமாற்றும் திறன் கொண்டுள்ளன.

இந்த இரண்டு கார்டுகளும் அருகில் உள்ள கணினி கடைகளிலும், இ-காமர்ஸ் தளங்களிலும் கிடைக்கின்றன. SILVER PRO 128 GB கார்டின் விலை ரூ. 7,750-க்கும், 256 GB கார்டு ரூ. 12,250-க்கும் அதேபோல், ARMOR GOLD 128 GB கார்டு ரூ. 9,250-க்கும், 256 GB கார்டு ரூ. 16,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: அட்சய திருதியை: ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com