
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 85.63 காசுகளாக இன்று (மே 20) நிறைவு பெற்றது.
நேற்றைய வணிக நேர முடிவில் 15 காசுகள் உயர்ந்து ரூ. 85.42 ஆக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு, இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில், 13 காசுகள் சரிவுடன் தொடங்கியது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு, இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 13 காசுகள் சரிந்து 85.55 காசுகளாக இருந்தது.
வணிக நேர மத்தியில் ரூபாய் மதிப்பு ரூ. 85.39 - ரூ. 85.65 காசுகளுக்கு இடையே வணிகம் நடைபெற்று வந்தது. எனினும் வணிக நேர முடிவில் 21 காசுகள் வரை சரிந்து ரூ. 85.63 காசுகளாக நிறைவு பெற்றது.
இந்திய சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணமாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிக்க | பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.