

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆரம் ப்ராப்டெக் லிமிடெட், டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 2.71 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆரம் ப்ராப்டெக் நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.52 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்திருந்தது.
நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.124.55 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.70.23 கோடியாக இருந்தது.
ஆரம் ப்ராப்டெக் நிறுவனம், நெஸ்ட்அவே டெக்னாலஜிஸ் என்ற இணையதளத்தை சொந்தமாக வைத்து இயக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், ஆரம் ப்ராப்டெக் நிறுவனம், நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான PropTiger.com கையகப்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.