மும்பை: ஹோர்முஸ் நீரிணையில் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன் டாலரின் மதிப்பும் வலுவடைந்தது. இதன் விளைவாக, அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 59 காசுகள் சரிந்து ரூ. 95.55 ஆக நிறைவடைந்தது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு உயர்ந்தன. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 6.16 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 78.73 டாலராக வர்த்தகமானது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 95.15 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும் ரூ. 94.98 முதல் ரூ. 95.61 என்ற வரம்பிற்குள் வர்த்தகமான நிலையில், இறுதியில் முந்தைய நாள் வர்த்தக முடிவிலிருந்து 59 காசுகள் சரிந்து ரூ. 95.55ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ. 94.96 ஆக நிறைவடைந்தது.
Summary
The rupee tanked 59 paise to settle at 95.55 against the US dollar on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ. 95.38 ஆக நிறைவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.54! 9 காசுகள் சரிவு!!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




