மும்பை: ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து அதிகரித்ததால் எண்ணெய் விநியோகம் குறித்த நிச்சயமற்ற தன்மை குறைந்தது. இதன் விளைவாக உலகளாவிய சூழல் மேம்பட்டதையடுத்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 48 காசுகள் உயர்ந்து ரூ. 94.95 ஆக நிறைவடைந்தன.
ஆசியாவிற்கான ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் விலையை சவுதி அரேபியா பீப்பாய் ஒன்றுக்கு 11 டாலர் வரை குறைத்தது சந்தை நம்பிக்கையை அதிகரித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவிற்கு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு பணவீக்க அழுத்தத்தைக் குறைக்க உதவியதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.33 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில், நாள் முழுவதும் ரூ. 94.94 முதல் ரூ. 95.37 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவின் நிலையை விட 48 காசுகள் உயர்ந்து ரூ. 94.95 ஆக நிலைபெற்றது.
முன்னதாக திங்கள்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக இருந்தது.
Summary
The rupee appreciated 48 paise to close at 94.95 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ. 95.21 ஆக நிறைவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.50! 10 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 காசுகள் உயர்ந்து ரூ. 95.08 ஆக நிறைவு!
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




