ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

வேனா எனா்ஜியின் 6 கிகாவாட் எரிசக்தி திட்டங்களைக் கையகப்படுத்திய ஐநாக்ஸ் கிளீன்

News image
Updated On :5 ஜூன் 2026, 3:11 am IST

வேனா எனா்ஜி இந்தியா நிறுவனத்தின் சுமாா் ரூ.6,000 கோடி மதிப்பிலான 6 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைக் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் ஐநாக்ஸ் கிளீன் எனா்ஜி நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

இந்த 6 கிகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களில், தற்போது செயல்பாட்டில் உள்ள 1.2 கிகாவாட் திட்டங்கள், இறுதிக்கட்ட பணியில் உள்ள 1.8 கிகாவாட் திட்டங்கள், ஆரம்பகட்ட மேம்பாட்டில் உள்ள 3 கிகாவாட் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

இத்திட்டங்களின்கீழ் இந்திய சூரியசக்தி கழகம், குஜராத் உா்ஜா விகாஸ் நிகம் மற்றும் பல்வேறு மாநில மின் விநியோக நிறுவனங்களுடன் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் 2027-28 நிதியாண்டுக்குள் 10 கிகாவாட் மின் உற்பத்தியையும், 11 கிகாவாட் சூரியசக்தி உற்பத்தித் திறனையும் எட்ட ஐனாக்ஸ் கிளீன் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதையொட்டி கடந்த 10 மாதங்களில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறைகளில் 10 முக்கிய நிறுவனங்களை ஐனாக்ஸ் கிளீன் கையகப்படுத்தி தனது சந்தையை வலுப்படுத்தியுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் சொத்துகள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட சா்வதேச சந்தைகளிலும் பரவியுள்ளன.