மும்பை: போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் ஈரானும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவால், இன்றயை அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 47 காசுகள் உயர்ந்து ரூ. 94.71 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டுப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு உள்ளிட்டவையால், ரூபாயின் மதிப்பு உயர்த்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 94.70 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 94.45 முதல் ரூ. 94.77 வரையான வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 47 காசுகள் உயர்ந்து ரூ. 94.71 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 67 காசுகள் உயர்ந்து ரூ. 95.18 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
Summary
Rupee Rises 47 Paise to 94.71
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











