வாட்ஸ்ஆப்பில் நேரடியாக இன்ஸ்டா ரீல்ஸ் அனுப்பலாம்! விரைவில் புதிய அம்சம்!
வாட்ஸ்ஆப்பில் நேரடியாக முகநூல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை அனுப்பும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

கோப்புப் படம்
வாட்ஸ்ஆப்பில் நேரடியாக முகநூல், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை அனுப்பும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்மூலம் முகநூல், இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், விடியோ, ரீல்ஸ்களை அனுப்ப, அவற்றை டவுன்லோடு செய்ய வேண்டியதில்லை. அவற்றின் லிங்குகளை அனுப்ப வேண்டிய தேவையும் இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்.
வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராம் அல்லது முகநூல் தரவுகளைப் பகிர வேண்டுமென்றால், அவற்றை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய வேண்டும் அல்லது அவற்றின் லிங்குகளை அனுப்ப வேண்டும்.
பதிவிறக்கம் செய்த விடியோவை வாட்ஸ்ஆப்பில் அனுப்ப தனியாக டேட்டா தேவைப்படும். லிங்குகளை அனுப்பினால் அவற்றை கிளிக் செய்து பார்ப்பவர்களிடமும் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கு இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது வாட்ஸ்ஆப் புதிய அம்சத்தை பரிசோதனை செய்து வருகிறது. இதன்மூலம் வாட்ஸ்ஆப்பில் நேரடியாக முகநூல், இன்ஸ்டாகிராம் தரவுகளை அனுப்ப முடியும். வாட்ஸ்ஆப்பில் இருந்தவாறே அவற்றைப் பார்க்க முடியும்.
இதற்காக அக்கவுண்ட்ஸ் சென்டர் என்ற அம்சம் புதிதாக வாட்ஸ்ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை இணைத்து வைத்துக்கொள்வதன் மூலம் வாட்ஸ்ஆப்பில் விடியோ அல்லது புகைப்படம் தேர்வு செய்யும் பகுதியில் இன்ஸ்டாகிராம், முகநூலில் ஏற்கெனவே பதிவிட்ட புகைப்படங்கள், விடியோக்கள், ரீல்ஸ்களை பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் சில பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பல பயனர்களுக்கு வழங்கப்படும் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
Summary
You can send Insta Reels directly on WhatsApp! New feature coming soon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






