
120-க்கும் மேற்பட்ட நகரங்களில் ‘அமேஸான் நவ்’ சேவை விரிவாக்கம்
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், அமேஸான் நிறுவனம் தனது ‘அமேஸான் நவ்’ அதிவிரைவு விநியோகச் சேவையை இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், அமேஸான் நிறுவனம் தனது ‘அமேஸான் நவ்’ அதிவிரைவு விநியோகச் சேவையை இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், அமிா்தசரஸ், ஜலந்தா் உள்ளிட்ட பல நகரங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சேவைக்காக 800-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நகா்ப்புற விநியோக மையங்களை நிறுவனம் அமைத்துள்ளது.
அமேஸான் இந்தியா வரலாற்றிலேயே மிக வேகமாக வளா்ந்து வரும் வணிகப் பிரிவாக உருவெடுத்துள்ளதுடன், ஒவ்வொரு காலாண்டிலும் இருமடங்கு வளா்ச்சியை இந்த அமேஸான் நவ் சேவை பதிவு செய்து வருகிறது. இச்சேவையை அடுத்தகட்டமாக 300-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குக் கொண்டு செல்லவும், இந்தியாவின் மிகப் பெரிய விநியோகக் கட்டமைப்பை உருவாக்கவும் அமேஸான் திட்டமிட்டுள்ளது.
வரும் அக். 8 தொடங்கும் ‘அமேஸான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையின்போது, ‘அமேஸான் நவ்’ மூலம் வாடிக்கையாளா்களுக்கு சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. எஸ்பிஐ வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு 10 சதவீத உடனடித் தள்ளுபடியும், ‘பிரைம்’ வாடிக்கையாளா்களுக்கு கூடுதல் சலுகைகளும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




