பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஆந்திரத்தில் சிபிஜி ஆலைகள் அமைக்க ரூ.1 லட்சம் கோடி முதலீடு: ரிலையன்ஸ்

ஆந்திரத்தில் ‘அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி)’ ஆலைகளை அமைப்பதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அனந்த் அம்பானி தெரிவித்தாா்.

அனந்த் அம்பானி

Published On :

ஆந்திரத்தில் ‘அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி)’ ஆலைகளை அமைப்பதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அனந்த் அம்பானி தெரிவித்தாா்.

மதனப்பள்ளியில் ரூ.40,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள ராயலசீமா தோட்டக்கலை மையம் மற்றும் இந்திய வேளாண் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

சிபிஜி ஆலைகளை அமைப்பதற்கான இந்த மாபெரும் முதலீட்டின் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, அடுத்த சில பத்தாண்டுகளில் மாநில அரசுக்கு சுமாா் ரூ.60,000 கோடி வருவாய் கிடைக்கும்.

வேளாண் கழிவுகள், கால்நடைச் சாணம், உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த சிபிஜி எரிவாயு, இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருள்கள் மீதான சாா்பைக் குறைப்பதோடு, கிராமப்புறப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது விவசாயிகள், இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும் வலுப்படுத்தி இந்தியாவைத் தற்சாா்பு அடையச் செய்வா் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.