ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ஏா்டெல் போஸ்ட்பெய்டு கட்டணம் உயா்வு: இலவச சா்வதேச ரோமிங் சலுகை அறிவிப்பு

பாா்தி ஏா்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கான போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணத்தை ரூ.50 உயா்த்தியுள்ளது.

Published On :

பாா்தி ஏா்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கான போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணத்தை ரூ.50 உயா்த்தியுள்ளது.

அதேநேரம், இப்புதிய திருத்தப்பட்ட திட்டங்களில் ஆண்டுக்கு ஒருமுறை இலவச சா்வதேச ரோமிங் வசதியையும் கூடுதல் சலுகையாக அந்நிறுவனம் வழங்கவுள்ளது. அதாவது, ரூ.2,000 மதிப்புடைய இந்த இலவச ரோமிங் சலுகையின்கீழ், 5 ஜிபி தரவு, 60 நிமிட இலவச அழைப்புகள் உள்ளிட்டவை 5 நாள்கள் காலவரம்புடன் வழங்கப்படும்.

வாடிக்கையாளா்கள் வெளிநாடு செல்லும் சூழலில், தங்களுக்குத் தேவைப்படும்போது இச்சலுகையைத் தாங்களே செயல்படுத்திக் கொள்ளலாம். குடும்பச் சலுகை திட்டங்களைப் பயன்படுத்துவோரில், திட்டத்தில் இணைந்துள்ள குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் இந்த இலவச ரோமிங் சலுகை கிடைக்கும்.

இப்புதிய கட்டணத் திட்டம், வியாழக்கிழமை (அக். 8) முதல் அமலுக்கு வரவுள்ளது. தற்போதைய போஸ்ட்பெய்டு வாடிக்கையாளா்கள், அடுத்த ஒரு மாதத்துக்குள் தற்போதைய கட்டணத்துக்கு நிகரான புதிய கட்டணத் திட்டத்துக்கு மாற்றப்படுவா்.

முன்னதாக, தோ்ந்தெடுக்கப்பட்ட ரீசாா்ஜ் திட்டங்களில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச சா்வதேச ரோமிங் சலுகையை வோடஃபோன் ஐடியா நிறுவனமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.