
இனி 60 டிகிரி செல்சியஸ் வெந்நீரிலும் துணி துவைக்கலாம்! கறைகளை எளிதில் நீக்கும் வாஷிங் மெஷின்!
ஸ்டீம் டெக்னாலஜி வசதியுடன் 60 டிகிரி செல்சியஸ் வரை தண்ணீரை சூடாக்கி துணிகளைத் துவைக்க முடியும்...

வாஷிங் மெஷின் - படம் / நன்றி - வேர்ல்பூல்
வேர்ல்பூல் நிறுவனத்தில் புதிதாக துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷின்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டீம் டெக்னாலஜி வசதியுடன் 60 டிகிரி செல்சியஸ் வரை தண்ணீரை சூடாக்கி அதன் பிறகு துணிகளைத் துவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் காய்ந்த கறைகள், எண்ணெய், மண், மை, காபி போன்ற கடும் கறைகளையும் எளிதில் நீக்க முடியும் என வேர்ல்பூல் கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த வேர்ல்பூல் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் நம்பகத்தன்மையான இடத்தைப் பெற்றுள்ளன.
தற்போது இந்திய ஆடைகளுக்கு ஏற்ப கடினமான கறைகளை அகற்றும் வகையில் ஸ்டீம் டெக்னாலஜி வசதியுடன் புதிய துணி துவைக்கும் இயந்திரத்தை தயாரித்துள்ளது.
இதன்மூலம் இயந்திரத்தில் உள்ள தண்ணீரை 60 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க முடியும். சுடு தண்ணீரில் துணிகளை துவைப்பதால் கடினமான கறைகளை எளிதில் நீக்க முடிகிறது.
100 வகையான கடினமான கறைகளையும் 99% நீக்க முடியும் என வேர்ல்பூல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
9 கிலோ மற்றும் 7 கிலோ என இருவேறு எடைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்வெர்டர் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளதால் குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும். இதன் விலை ரூ. 26,790 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Summary
whirlpool steam wash technology Front Load Washing Machine
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






