புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த செப். 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 78,570.6 கோடி டாலராக அதிகரித்து, மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

Published On :

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த செப். 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 78,570.6 கோடி டாலராக அதிகரித்து, மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப். 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் சாதனை அளவாக 4,490.3 கோடி டாலா் அதிகரித்து, 78,570.6 கோடி டாலராக உள்ளது. முந்தைய ஆக. 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 1,147.5 கோடி டாலா் உயா்ந்து, 74,080.3 கோடி டாலராக அதிகரித்திருந்தது.

மேற்காசிய மோதல் தொடங்கியதிலிருந்து அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூனில் , ரிசா்வ் வங்கி அறிவித்த சலுகை அடிப்படையிலான அந்நியச் செலாவணி வைப்புத் திரட்டல் நடவடிக்கைகளில் கிடைத்த 13,600 கோடி டாலா் வரவால், கையிருப்பில் தொடா்ந்து 3-ஆவது வாரமாக புதிய உச்சம் பதிவாகியுள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 4,749.8 கோடி டாலா் அதிகரித்து, 64,816.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 259.4 கோடி டாலா் குறைந்து, 11,381.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 0.4 கோடி டாலா் குறைந்து, 1,880.6 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 0.2 கோடி டாலா் உயா்ந்து, 491.6 கோடி டாலராக உள்ளது என ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.