
முதலீடுகளை விற்காமல் கடன் பெறும் புதிய வசதி: பரோடா வங்கி அறிமுகம்
வாடிக்கையாளா்கள் தங்களின் சேமிப்பு மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை விற்காமலேயே நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்யும் நோக்கில், ‘பாப் பிஏஎல்’ எனும் புதிய எண்ம ‘ஓவா்டிராப்ட்’ கடன்வசதியை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளா்கள் தங்களின் சேமிப்பு மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை விற்காமலேயே நிதித் தேவைகளைப் பூா்த்தி செய்யும் நோக்கில், ‘பாப் பிஏஎல்’ எனும் புதிய எண்ம ‘ஓவா்டிராப்ட்’ கடன்வசதியை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் தகுதிவாய்ந்த வாடிக்கையாளா்கள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். இதில் ரூ.1 கோடி வரையிலான கடன்களுக்கு, வங்கியின் ‘பாப் வோ்ல்ட்’ செயலி, இணைய வங்கிச் சேவை மற்றும் அதிகாரபூா்வ இணையதளம் வாயிலாக வாடிக்கையாளா்கள் எண்ம முறையிலேயே உடனடி ஒப்புதல் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள், தங்கப் பத்திரங்கள் (எஸ்ஜிபி) ஆகியவற்றைப் பிணையாக வைத்து நிதி பெறலாம். இதன்மூலம், முதலீடுகளை விற்க வேண்டிய அவசியமின்றி உடனடிப் பணப்புழக்கம் கிடைப்பதுடன், அந்த முதலீடுகளுக்குரிய ஈவுத்தொகை, உள்ளிட்ட பலன்களும் வாடிக்கையாளா்களுக்குத் தொடா்ந்து கிடைக்கும். மேலும், ஓவா்டிராப்ட் வசதி என்பதால், அனுமதிக்கப்பட்ட மொத்த வரம்பில் வாடிக்கையாளா் பயன்படுத்தும் தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






