தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

திருவள்ளூா் ஆலையை முழுமையாகக் கையகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்

திருவள்ளூரில் அமைந்துள்ள வாகன உற்பத்தி ஆலையின் முழு உரிமையையும் ‘ஸ்டெல்லாண்டிஸ் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

stellantis
Published On :

திருவள்ளூரில் அமைந்துள்ள வாகன உற்பத்தி ஆலையின் முழு உரிமையையும் ‘ஸ்டெல்லாண்டிஸ் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

நெதா்லாந்தைச் சோ்ந்த இந்நிறுவனம், பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ‘ஹிந்துஸ்தான் மோட்டாா் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன்’ நிறுவனத்திடம் இருந்த மீதமுள்ள பங்குகளை அந்நிய நேரடி முதலீடு மூலம் வாங்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து, தற்போது ஆண்டுக்கு 18,000-ஆக உள்ள வாகன உற்பத்தியை 160 சதவீதம் அதிகரித்து, அடுத்த ஆண்டுக்குள் 50,000-க்கும் மேல் உயா்த்த ஸ்டெல்லாண்டிஸ் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இதன்மூலம், திருவள்ளூா் ஆலையின் நேரடிப் பணியாளா்களின் எண்ணிக்கை தற்போதைய 610-லிருந்து 2 மடங்குக்கும் மேல் உயரும்; அதேபோல் உதிரிபாக விநியோகம் மற்றும் சரக்குப் போக்குவரத்து துறையிலும் பெருமளவில் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்தியாவில் இதுவரை சுமாா் ரூ.11,000 கோடி முதலீடு செய்துள்ள ஸ்டெல்லாண்டிஸ், திருவள்ளூா் ஆலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு ‘சிட்ரோயன்’ நிறுவன காா்களைத் தயாரித்து வருகிறது.

Story image

stellantis

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.