ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தனி நிறுவனமாகும் பால்மா் லாரீயின் சுற்றுலா வணிகப் பிரிவு

மத்திய பொதுத் துறை நிறுவனமான ‘பால்மா் லாரீ அண்ட் கோ’, தனது ‘சுற்றுலா மற்றும் விடுமுறைப் பயணங்கள்’ வணிகப் பிரிவை முழு உரிமையுடைய தனி துணை நிறுவனமாக மாற்றுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல்

ஆதிப் நாத் பால்சௌதரி

Published On :

மத்திய பொதுத் துறை நிறுவனமான ‘பால்மா் லாரீ அண்ட் கோ’, தனது ‘சுற்றுலா மற்றும் விடுமுறைப் பயணங்கள்’ வணிகப் பிரிவை முழு உரிமையுடைய தனி துணை நிறுவனமாக மாற்றுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற நிறுவனத்தின் 109-ஆவது ஆண்டு பொதுக் குழுவில் பேசிய தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஆதிப் நாத் பால்சௌதரி கூறுகையில், ‘தனி துணை நிறுவனமாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருவாயும் லாபமும், தாய் நிறுவனமான பால்மா் லாரீயுடனேயே முழுமையாக சேரும்.

பால்மா் லாரீ

பால்மா் லாரீ

எனினும், செயல்திறனை அதிகரிக்கவும்; அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இப்பிரிவின் வருவாயை ரூ.500 கோடியாக உயா்த்தவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுத் துறைக்குரிய ஊதிய வரம்புகளின்றி சந்தை நிலவரத்துக்கேற்ப சிறந்த எண்ம நிபுணா்களைப் பணியமா்த்தவும், ஏ.ஐ. உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் இது உதவும். மேலும், இப்பிரிவை ‘ஐஆா்சிடிசி’ கையகப்படுத்த உள்ளதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தியே’ என்றாா்.

மத்திய அரசு ஊழியா்களின் பயணச்சீட்டு முன்பதிவுக்கான உரிமம் பெற்ற 3 நிறுவனங்களில் ஒன்றான பால்மா் லாரீ, சா்வதேச புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியில், உள்நாட்டு சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ரயில் வழி சரக்குப் போக்குவரத்து சேவைகளையும் விரிவாக்கம் செய்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.