
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 96.03 ஆக நிறைவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 96.03 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்
மும்பை: ஈரான் முன்வைத்த ஒப்பந்த முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை முடங்கியதால், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ. 96.03 ஆக நிலைபெற்றது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முட்டுக்கட்டை நிலை தொடர்வதால் உலகளாவிய முதலீட்டுச் சூழல் மோசமடைந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 95.89 என்ற சரிவு நிலையுடன் வர்த்தகத்தைத் தொடங்கி, வர்த்தகத்தின் போது மேலும் சரிந்து, முந்தைய நாள் முடிவை விட 28 காசுகள் குறைந்து ரூ. 96.03 ஆக நிலைபெற்றது.
வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.75 ஆக இருந்தது.
Summary
The rupee depreciated 28 paise to close at 96.03 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







