மகாத்மா காந்தி பம்பாய் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதிய பதிலில், சரியாக அநுஷ்டித்தால் அஹிம்சையால் ஹிட்லரின் பலாத்காரத்தையும் நிர்வகிக்கலாமென்று வலியுறுத்துகிறார்.
மகாத்மா கடிதத்தின் முழு விவரம் பின் வருமாறு:-
தங்கள் பத்திரிகையில் தாங்கள் என்னைக் குறித்து தீவிர உணர்ச்சியுடன் எழுதியிருந்தீர்கள். அதற்கு நான் பதில் எழுதவேண்டியது அவசியமாகும்.
தாங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டாலும், எனது நம்பிக்கையை நான் விடுவதற்கில்லை. மிக இழிந்த மனித சுபாவமும் அஹிம்சைக்கு இணங்குமென்று நான் நம்புகிறேன். எதிர்ப்புகளையெல்லாம் வெல்லுவதே அஹிம்சையின் சாரமாகும். எதிர்ப்புகளையெல்லாம் வெல்லும் அளவுக்கு என்னிடம் அஹிம்சை பொருந்தியிருக்கவில்லையென்பதும், மற்றவர்களிடம் அஹிம்சை குறைவாகவே இருக்கிறதென்பதும் ஒரு வேளை உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் அஹிம்சையின் சக்தியை லேசாகக் கருதிவிட மாட்டேன். அதுமட்டுமல்ல; ஜெர்மன் சர்வாதிகாரி இணங்கமாட்டாரென்று நான் அவநம்பிக்கை கொள்ளவும் மாட்டேன்.
இதுவரையில் நான் இந்தியாவில் நிர்வகித்து வரும் படைகளுக்கும், ஹிட்லர் இந்தியா மீது படையெடுத்தால் நான் நிர்வகிக்க வேண்டிய படைகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. ஹிட்லர் ஒவ்வொரு சத்யாக்ரஹியையும் கொல்லக்கூடுமென்பதால் திகிலோ, துயரமோ ஏற்படவில்லை. அஹிம்சையில் நம்பிக்கை உடையவர்கள் எனக்கு சகாக்களாக இருந்தாலும், ஹிட்லரை எதிர்த்து அஹிம்சா போரை ஆரம்பிப்பேன். அதில் தயங்கவே மாட்டேன். அவ்வித அஹிம்சை உண்மை பரீட்சையில் வெற்றி பெறுமா அல்லவாவென்பது ஒரு பொருத்தமான கேள்வியே. நான் அவ்வித சகாக்களின் உதவியுடன் வெற்றி பெற்றே இருக்கிறேன்.
தினமணி (15-02-1941)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலி ராபின்சன், ஜோஷ் டங் வேகத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்; 171 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

உலகில் 3.4 கோடி மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை! இந்தியாவின் நிலை என்ன?
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 19 - நேரலை!

முதல்வர் விஜய்யின் அலுவலக அறை ஒப்பந்த முறைகேடு? தமிழக அரசு விளக்கம்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



