ஆசனம் 27. யோகமுத்ராசன கிரியா
ஆசனங்களின் அரசி எனப்படுவது யோகமுத்ராசனம். ஆசனங்களில் முத்திரையான ஆசனம் என்ற முக்கியத்துவம் பெற்றதால் இதற்கு யோகமுத்ராசன கிரியா என்று பெயர்.

சீரியல் சீரியஸ்
டேபிள் மேல் இருந்த கைப்பேசி ஒலித்தது. டிவி சீரியல் பார்த்துக்கொண்டிருந்த வசுந்தரா, ஓரக்கண்ணால் கைப்பேசியைப் பார்த்தாள்.
அவளது கணவனிடம் இருந்துதான் அந்தப் போன்கால்.
டிவி சீரியலில் “தாலி பெண்ணுக்குப் போலி” தொடரின் நாயகி இப்படிப் பேசிக்கொண்டிருந்தாள் -
“…எல்லா விஷயத்திலயும் புருஷனை அலட்சியப்படுத்தனுன்டி கலா. உதாரணத்துக்கு, ஆபீஸ்ல இருந்து ஹஸ்பண்ட் மொபைல்ல கூப்பிட்டா, உடனே அட்டென் பண்ணக்கூடாது. தவிக்கவிட்டு வேடிக்கை பாக்கணும். ஏன், என்னுன்னு நெனச்சி நெனச்சி மண்டை காயணும்….”
வசுந்தராவின் கைவிரல் செல்லை செலன்ட் மோடுக்கு மாற்ற, அவள் கண்கள் டிவியில் நிலைத்தது.
கணவன் ஓய்ந்தான். அவள் டீவி சீரியலில் கவனத்தைத் தொடர்ந்தாள்.
“கலா, குரங்காட்டி கையில குச்சிவெச்சிருப்பான் தெரியுமா. அது குதிக்கும்போதெல்லாம் அதோட தலையில தட்டுவான். அப்படியே உட்கார்ந்துடும். அதுமாதிரி புருஷனையும் அப்பப்ப தட்டிக்கிட்டே இருக்கணும். நிமிர விடவே கூடாதுடி…”
“ஒரு நாள், உன் புருஷன் எத்தனை தடவை கூப்பிட்டாலும் எடுக்காம இருந்து பாரு. சாயங்காலம் பயங்கர கோபத்தோட வருவான். அப்போ நீ ரொம்ப போல்டா இரு. கொஞ்சம்கூட பயப்படாதே” என்றபடி, அந்த நாயகி தனது புடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக்கொண்டாள்.
அவள் பேசுவதை, சோகத்தோடு கைகளைப் பிசைந்தபடியே கலா என்ற கதாபாத்திரம் கேட்டுக்கொண்டிருக்க, அவள் கன்னத்தில் இருந்த ஐந்து விரல் தடத்தை கேமரா குளோசப்பில் காட்டியது.
செருகிய புடவைத் தலைப்பை ஓங்கி விசிறியபடி, வேகமாக கலா அருகில் வந்த நாயகி, பாட்ஷா படத்தில் “ஏய்… ஏய்… ஏய்…” என்று ரஜினி கைவிரலை நீட்டிப் பேசுவதுபோல் பேசினாள்.
“ஏய் ஏய் ஏய்… உன் கன்னத்துல அஞ்சு விரலும் பதியற அளவுக்கு அடிச்சிருக்கான். நீ அவனை சும்மா விட்டுட்டு வந்திருக்கே. வெட்கமா இல்லே? அவன் அஞ்சு விரல்ல அடிச்சான்னா, நீ பத்து விரல்ல அடிச்சிருக்கனுன்டி’’ என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கியபடி, தீவிரமான யோசனையோடு குறுக்கும் நெடுக்குமாக உதடுகளைத் கடித்துக்கொண்டே நடந்தாள் நாயகி.
“நீ இங்கிருந்து போயிடு கலா. இனியும் என் முன்னால நிக்காதே. நின்னா நான் பொல்லாதவளா ஆயிடுவேன்” என்று அவளை விட்டு நடந்தவள், திடீரென்று நின்று திரும்பி வந்து அவள் அருகே நின்றாள்.
“இங்க பாருடீ. என் புருஷனும்தான் ஒருநாள் என்னை அடிச்சான். அது உனக்குத் தெரியுமா? விரலை ஸ்டைலாக சொடுக்கி, ஒரே நாள்தான் அடிச்சான். அதான் அவன் அடிச்ச கடைசி அடி! உன்னப்போல நான் பயந்துகிட்டு ஓடிவரல! உள்ளயே கரம் வச்சேன். என்ன பண்ணேன் தெரியுமா? சொல்றேன் கேளு...’’
கலா கதாபாத்திரம், பயம் கலந்த பார்வையோடு அவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தது.
“வழக்கம்போல ஸ்வீட், காரம், பூவெல்லாம் வாங்கிட்டுவந்தாரு. மஹும். இதுக்கெல்லாம் நான் மயங்கமாட்டேன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு வாங்கிக்கிட்டேன். அன்னிக்கு ராத்திரி தூங்கறப்போ…’’
கலா கதாபாத்திரம், ஆர்வத்தோடு அவள் முகத்தையே கூர்ந்து கவனித்தது.
வசுந்தராவும் தொடரை ஆவலோடு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது,
தாலி பெண்ணுக்குப் போலி, ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு… - விளம்பர இடைவேளை.
மறுபடியும், வசுந்தராவின் அலைபேசியில் அப்பாவிக் கணவன் அலற ஆரம்பித்தான்.
ஓரக்கண்ணால் அலட்சியமாகப் பார்த்துவிட்டு, மீண்டும் டிவியில் பார்வையைச் செலுத்தினாள். விளம்பர இடைவேளைக்குள் வேறு சீரியலுக்கு போய்விட்டு வரலாம் என்று ரிமோட்டை அழுத்தினாள் வசுந்தரா.
மீண்டும் தொடர்கிறது, “நீயா நானா பார்ப்போம் அண்ணி…”
அந்தத் தொடரின் வசனம், வசுந்தராவை இன்னும் ஈர்த்தது.
தனது அண்ணன் மனைவி கீதாவிடம் ஷோபா பேசிக்கொண்டிருந்தாள்.
“...பாருங்க அண்ணி… நீங்க என்னோட அண்ணனுக்கு மனைவியாத்தான் வந்தீங்க. எத்தனை வருஷம் அவரோட இருப்பீங்கன்னு சொல்ல முடியாது!”
“என்ன சொல்ற ஷோபா?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அண்ணி.
“நான் வாழ்க்கை நிலையாமையச் சொன்னேன் அண்ணி. நான் என் அண்ணனோடயே ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லே, இருபத்தி நாலு வருஷம் இருந்திருக்கேன். அதெப்படி, நேத்து வந்த ஒருத்திக்காக “பாசமலர்” உறவைத் துண்டிக்க முடியும்?”
“நான் துண்டிக்கலையே ஷோபா. உங்க அண்ணனுக்கும் உனக்கும் பாசம் இருக்கக்கூடாதுன்னு சொல்லலியே. தங்கச்சி வாழாவெட்டியா வந்திருக்கா. அவளை மனம் கோணாம பார்த்துக்கணும்னு அவருதான் என்கிட்ட சொல்லியிருக்காரு ஷோபா. உங்க அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு ஒருக்காலும் குறுக்கே வரமாட்டேன். நானும் ஒரு தம்பியோட பொறந்தவள்தான் ஷோபா.
“தம்பியோட பொறந்ததை விடுங்க அண்ணி. அவன் சின்னவன். ஆனா நான் அண்ணனோட பொறந்திருக்கேன். அண்ணன் பெரியவன். இன்னிக்கு அண்ணன் இந்தியாவிலயே பிஸினஸ்ல பெரிய ஆளா இருக்காருன்னா, அதுக்கு பத்து வருஷமா நான் தந்த ஊக்கம்தான் காரணம் அண்ணி”.
“இப்போ அதுக்கு என்ன ஷோபா? ஏன் சம்பந்தம் இல்லாம பேசற?
“நீங்க என்கிட்ட இருந்து அண்ணனை பிரிச்சிடுவீங்கன்னு தோணுது”.
“பைத்தியக்காரத்தனமா உளறாத ஷோபா. உனக்கு எப்படி உங்க அண்ணன்கிட்ட உரிமை இருக்கோ, அதுபோல எனக்கும் அவர்கிட்ட மனைவிங்கற உரிமை இருக்கு. நீ உன் புருஷனை விட்டுட்டு வந்திருக்க. அதனால, எதை எதையோ நினைச்சி குழம்பற. பொண்ணுக்கு புகுந்த வீடுதான் பெருமை. நீ உன் புருஷன் வீட்டுல போய் இருந்தா, இந்த மாதிரி வேண்டாத சிந்தனையெல்லாம் வராது”.
“அதான பார்த்தேன். நான் இங்க இருக்கறதுதான் உங்களுக்குப் பிடிக்கல. இந்த நிலைமை உங்களுக்கு வர்றதுக்கு எவ்வளவு நாள் ஆகும். நீங்களும் ஒருநாள் வாழா வெட்டியா ஆகாமலா போவீங்க?”.
“அடச்சீ… நீ திமிர் எடுத்துப்போய் உன் அண்ணன் வீட்டுல வந்து உட்கார்ந்துகிட்டா நானும் என் தம்பி வீட்டுலபோய் உட்காருவேன்னு பார்த்தியா? செத்தாலும் இங்கதான் சாவேனே ஒழிய, எந்த நாய்க்காகவும் என் இடத்தை நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்”.
“ஏய்… என்னடி நாய் கீய்ன்னு பேசறே? என்னைப் பார்த்தா நாய் மாதிரி தெரியுதா? அண்ணின்னு பார்க்கறேன்”.
“இல்லன்னா என்னடி பண்ணுவே?”
“இன்னொரு வாட்டி நாய்ன்னு சொல்லிப் பாருடீ. எங்க அண்ணன் போடற பிச்சையைப் பொறுக்க வந்த குரங்குடீ நீ. அந்த அண்ணனை கோபுரமாக்குன தங்கச்சியைப் பார்த்து நாய்னு சொல்லிட்டியே. உன்ன என்ன பண்றேன் பார்!’’ என்று விரலைச் சொடுக்கி,
‘’இன்னும் பத்தே நாள்ல உன்னை உன் தம்பி வீட்டுல போய் வாழாவெட்டியா உட்காரவெக்கிறேன்டீ. நான் படற கஷ்டத்தை நீயும் படணும். அதான் என் ஆசை... நாய்ன்னா சொல்ற. என் மனசே ஆறலைடீ ஆறலை...”
“மனசு ஆறலன்னா உள்ள போயி ஏசியை போட்டுட்டுப் படு”.
“ஓஹோ ஏசி ரூம்ல படுக்கற திமிர்ல பேசறியா. கல்யாணத்துக்கு முன்னால உனக்கு ஏசின்னா என்னன்னு தெரியுமாடீ. எங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணப்போயி உனக்கு ஏசி…”
“எனக்கு ஏசி வேணாம், ஃபேன் வேணாம், கார் வேணாம், ஒண்ணும் வேணாம். உங்க அண்ணனோட கால் மண்ணு கிடைச்சா போதும். புருஷன மதிக்கத் தெரிஞ்ச பரம்பரைடீ நான்”.
“அப்போ, நாங்கள்லாம் புருஷனை கால்ல போட்டு மிதிக்கற பரம்பரையா?”
வாக்குவாதம் முற்றியது.
“…அப்போ, உங்க அண்ணன் செத்தாலும் பராயில்லை; நான் தாலி அறுக்கணும். அதான உன் விருப்பம்?’’
“எங்க அண்ணன் எதுக்குடி சாகணும். உன் அப்பா சாகணும், உன் தம்பி சாகணும், உன் சொந்தபந்தம் அத்தனையும் சாகணும்” என்று வெறிபிடித்தவள்போல் கத்தினாள் ஷோபா.
கீதா கண்களில் கோபம் ஏறியவளாக, ‘’ஏய், கல்யாணம் பண்ணி நாலு மாசம்கூட ஆகல. உங்க அண்ணன் மேல உசுரா இருக்கேன். என்னப் பார்த்து ஏன்னடி சொன்ன…?’’
இருவரும் கைகளை நீட்டி ஒருவர் கழுத்தை ஒருவர் நெறிக்கப்போக…
சிறிய இடைவேளைக்குப் பிறகு “நீயா நானா பார்ப்போம் அண்ணி”
உடனே வசுந்தரா சேனலை, “தாலி பெண்ணுக்குப் போலி”க்கு மாற்றினாள்.
அவளோட துரதிஷ்டம். காட்சி கடந்துவிட்டது!
கணவன் மீண்டும் அழைத்தான். அவள் அதை கட் பண்ண, சிறிது நேரத்தில் லேண்ட்லைனுக்கு வந்தான். அவள் எடுக்க, கணவன் கத்தினான்.

உளவியல் மருத்துவர் சகாயம் அறைக்குள் இருந்து வசுந்தரா வெளிப்பட்டாள். கணவன் கிருஷ்ணராஜ், அவளை ஆறுதலாகத் தாங்கியபடி ஆட்டோவில் உட்கார, ஆட்டோ கிளம்பியது.
அடுத்த பெண்மணி, உளவியல் மருத்துவரிடம் போய் உட்கார்ந்தாள். அவளிடம் டாக்டர் சொன்னார் –
“…இப்போ வெளியில போனாங்களே. அவங்ககூட உங்க கேஸ்தான். பெண்கள் தினமும் பல சீரியல்கள பார்க்கறாங்க. எல்லாத்துலயும், சதிகளும், மோசடிகளும், பாலிடிக்ஸும், வன்முறைகளும் காண்பிக்கறாங்க. கிட்டத்தட்ட எல்லா சீரியலுமே அப்படி இருக்கறதால, அதைப் பாக்கற எல்லாரும் மனரீதியா பாதிக்கப்படறாங்க. என்கிட்ட வர்றவங்கள்ல முக்கால்வாசி பேர், சீரியல் கேஸ்கள்தான். அது மருத்துவமே இல்லாத, கொடிய மனநோய்ல கொண்டுபோய் விட்டுடுது! உங்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன். டீவியில நல்ல நிகழ்ச்சி இருந்தா பாருங்க. இல்லேன்னா, டிவிய ஆஃப் பண்ணிட்டு புக்ஸ் படிங்க. அதுவும் பிடிக்கலன்னா, கோயில் கொளம்னு போங்க. புண்ணியமும் கிடைக்கும், மனசுக்கு நிம்மதியும் கிடைக்கும்’’.
மனத்தை சிதறவிடுவது கூடாது என்கிறது பிரத்யாகாரம்.

பெயர்க் காரணம்
ஆசனங்களின் அரசி எனப்படுவது யோகமுத்ராசனம். ஆசனங்களில் முத்திரையான ஆசனம் என்ற முக்கியத்துவம் பெற்றதால் இதற்கு யோகமுத்ராசன கிரியா என்று பெயர்.
செய்முறை
பத்மாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
இரண்டு கை விரல்களையும் மடக்கி, அடிவயிற்றில் தொடைகள் வயிற்றோடு சந்திக்கும் இடத்தில் வைத்து, சுவாசத்தை வெளியிட்டவாறு குனியவும்.
அதே நிலையில், சுவாசத்தை இழுத்துவிட வேண்டும்.

கிரியா

சுவாசத்தை உள்ளிழுத்தவாறு நிமிர்ந்து, பின்னர் கைகளை வெளியே எடுக்கவும்.

இப்போது, இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் நீட்டி அல்லது மடக்கி வைத்துக்கொண்டு, சுவாசத்தை உள்ளிழுத்தவாறு குனியவும்.

பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு நிமிரவும்.

பின்னர் குனிந்தபடி, கைகள் இரண்டையும் தரையில் நீட்டி வைக்கவும். ஆழ்ந்த சுவாசம் எடுக்கவும். பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தபடி நிமிரவும்.

அடுத்த முறை, கைகள் இரண்டையும் தலைக்குப்பின்னால் மடக்கி வைத்து, விரல்களைப் பின்னியபடி நிமிர்ந்து அமரவும்.

உள் சுவாசம் எடுத்து, அதை வெளியிட்டபடியே குனிந்து இடது முழங்கை, வலது முழங்கால் மீது இருக்குமாறு வைக்கவும். (வலது முழங்கை மேல்நோக்கி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்).

சில சுவாசங்கள் எடுக்கவும். பின்னர் சுவாத்தை உள்ளிழுத்தவாறு நிமிரவும்.

அடுத்தமுறை சுவாசத்தை வெளியிட்டவாறு குனிந்து, வலது கை இடது முழங்கால் மீது இருக்கமாறு வைக்கவும். இப்போது இடது முழங்கை மேல் நோக்கி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். சில சுவாசங்கள் எடுக்கவும். பின்னர் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுத்தவாறு நிமிரவும்.

இதேபோல் மாற்றி மாற்றிச் செய்யவும்.

பலன்கள்

முதுகுத் தண்டுவடம் இடது வலமாகவும், வலது இடமாகவும் திருகி முறுக்கப்படுகிறது. இதனால், நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

கல்லீரல், மண்ணீரல் பிசையப்படுவதால், சர்க்கரை வியாதி வராது.

சிறுநீரகங்கள் இழுக்கப்பட்டு, ரத்த ஓட்டம் பாய்வதால் சிறுநீரகப் பாதிப்பு வராது.

விடியோ: சுந்தரி
படம்: ப்ரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...