கீழடி ஸ்பெஷல்: தொல்லியல் ஆய்வுக்கு உதவிய கீழடி நாயகர்கள்!

உலகின் முதல் நாகரிக நகரமாக மதுரை அறியப்படுகிறது. வெள்ளக் காலத்துக்கு முன்பே,
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பில் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணி.
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பில் வடிவமைக்கப்பட்ட எழுத்தாணி.
Published on
Updated on
2 min read

உலகின் முதல் நாகரிக நகரமாக மதுரை அறியப்படுகிறது. வெள்ளக் காலத்துக்கு முன்பே, தென் மதுரை பற்றிய செய்திகள், தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. மதுரை என்பதற்கு, மது குடித்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் அங்கு வாழ்ந்த மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்து இருந்தனர் என்ற பொருந்தாத காரணத்தைக் கூறுகின்றனர். 

உண்மையில், இன்றும் அப்பகுதி மக்களால் சொல்லப்பட்டுவரும் மருதை என்பதே, அந்நகரின் முதல் பெயர் ஆகும். மருத நிலம் சூழ்ந்துள்ள பகுதியாதலால், மருதை எனப்பட்டது என்பார் மா.சோ.விகடர்.

கீழடி நாயகர்களில் முதலில் அந்த ஊர் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன். இவர் இதுபோல் பழங்கால பொருள்கள் இங்கே இருக்கிறது என்று தொல்லியியல்துறைக்கு தகவல் அனுப்புகிறார், அதை தொல்லியியல் அறிஞர் வெ.வேதாச்சலம், மத்திய தொல்லியியல் துறைக்கு அனுப்புகிறார்.

அதை தொல்லியியல் ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருட்ணன் களஆய்வு செய்து, மத்திய அரசிடம் அனுமதி வாங்கி அப்பொழுது ஆரம்பிக்கிறது கீழடி அகழாய்வு வரலாறு.

கரு. முருகேசன்
கரு. முருகேசன்


அதற்குப் பின், நில உரிமையாளர்களான கரு.முருகேசன் மற்றும் சோலை குடும்பர் இருவரிடமும் அனுமதி பெற, அவர்களும் இலவசமாக நிலத்தைக் கொடுக்கிறார்கள். அடுத்தபடியாக, ஆராய்ச்சியை துவங்கி பொருள்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிடுகிறார் அமர்நாத் ராமகிருட்ணன். 

கீழடி கண்மணி
கீழடி கண்மணி

அதில், 2000 ஆண்டுகள் பழமையானது! இதில் தெய்வ வழிபாடு பற்றி எந்த ஆதாரமும் இல்லை என்ற அடுத்த நொடியே அவரை அசாமுக்கு மாற்றி, கிழடியில் கிடைத்த பொருள்களை பெங்களூர் ஆய்வகத்திற்கு மாற்ற நினைத்த போது, உடனடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் வழக்கறிஞர் கனிமொழிமதி. இவரது தீரிய முயற்சியால் நீதிமன்றம் தலையிட்டு அந்த பொருள்களை அங்கேயே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் அமர்நாத் ராமகிருட்ணனை அங்கே நியமனம் செய்து வேலை தொடங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.

மத்திய தொல்லியல் துறை ரூ.10 ஆயிரம் கோடி நிதியில் இயங்குகிறது. தமிழக அரசு ரூ 23 கோடி நிதியில்தான் இயங்கி வருகிறது. மத்திய அரசு நிதி இல்லை என்ற போது! மாநில அரசு செய்யலாம் என்று ஆணை பெற்று அதற்காக மாநில தொல்லியியல் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராசன்  அடுத்தக் கட்டப் பணியைத் தொடங்கினார்.

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ஆகியோருக்கும், இந்த ஆய்வுப் பணியில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் தமிழ்மக்கள் நன்றி கூர்வர்.

தொடரும்…
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com