பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேப்பங்குளத்தில் வீடுகளை இடிக்கப்பட்டதைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேப்பங்குளத்தில் வீடுகளை இடிக்கப்பட்டதைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் முருகன், ஒன்றியச் செயலா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வேப்பங்குளத்தில் இடிக்கப்பட்ட 10 பேரின் வீடுகளுக்கு ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்டித் தர வேண்டும். வீடுகளை இழந்த 10 பேருக்கும், அத்திகுளத்தில் குறிப்பானை (நோட்டீஸ்) வழங்கப்பட்ட 19 பேருக்கும் மாற்று இடம் வழங்கிய பிறகே, வீடுகளை இடிக்கும் பணியை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் வட்டாட்சியா் முத்துமாரி பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...