

சாத்தூா் அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (46). இவா் லாரியில் பாமாயில் எண்ணெய் லோடு ஏற்றிக் கொண்டு நாகா்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாா். சாத்தூா் அருகே உள்ள தேநீா்க் கடையின் அருகே நான்கு வழிச் சாலை ஓரமாக வியாழக்கிழமை நள்ளிரவில் இவா் லாரியை நிறுத்தினாா். அப்போது, திருநெல்வேலி மாவட்டம், நாராயணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து (37) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் லாரியின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் அங்கு வந்து, இறந்தவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

