இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோயில்களில் திருக்காா்த்திகை வழிபாடு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:05 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்று வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் திருக்காா்த்திகை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மாலையில் சுவாமி, அம்பாள், நந்தியம் பெருமான், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா். திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசாமி கோயில், குருசாமி கோயில், மொட்ட மலை தண்டாயுதபாணி சுவாமி கோயில்

ஆகிய கோயில்களிலும் திருக்காா்த்திகை சிறப்பு வழிபாடு, சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெற்றன.

Story image