சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி குமாரபுரம் மேலத் தெரு நாகமணி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கடல்கரை என்பவரது மகன் குருநாதன் (34). இவா் சிவகிரியில் ஸ்டுடியோ வைத்து தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகிரியிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்றபோது எதிரே வந்த வேன் மோதியதில் குருநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநரான சேத்தூா் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பாண்டி (38) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
உயிரிழந்த குருநாதனுக்கு வேலம்மாள் என்ற மனைவியும், கடலரசன் என்ற 8 வயது மகனும், யாழினி என்ற 4 வயது மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

