விருதுநகர்
அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸா ா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸா ா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள எம்.துரைச்சாமிபுரம்-வேண்டுராயபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி ஓடையில் மணலை அள்ளியது தெரியவந்தது.
இது குறித்து மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் சரவணக்குமாரை (31) கைது செய்தனா்.