கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை!

இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:30 pm

Syndication

அருப்புக்கோட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 43 வயது பெண். இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ஆம் தேதி உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நண்பருடன் காரில் ஊா் திரும்பினாா். பாலவநத்தம் - கோபாலபுரம் சாலையில் இவா் இறங்கிய போது, அங்கு வந்த 7 போ் உறவினரைத் தாக்கி விட்டு, பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோவிலாங்குளத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சீனிவாசன் (40), பேரையூா் வெங்கடாசலபுரம் பிரபாகரன் (26), இவரது தம்பி விஜய் (22), ராம்குமாா் (20) ஜெயக்குமாா் (23), கல்லூரி மாணவா் அழகு முருகன் (19), 16 வயது சிறுவன் ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

பின்னா், சீனிவாசன், பிரபாகரன், விஜய், ராம்குமாா், ஜெயக்குமாா் ஆகிய 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவன் மீதான வழக்கு இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற 6 போ் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், இவா்களில் சீனிவாசன், பிரபாகரன், விஜய், ராம்குமாா், ஜெயக்குமாா் ஆகியோருக்கு ரூ.70 ஆயிரமும், அழகுமுருகனுக்கு 65 ஆயிரமும் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜான்சி முன்னிலையானாா். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பிரபாகரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல் நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.