கள்ள நோட்டு வழக்கு: மேலும் ஒருவா் கைது

சிவகாசியில் கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் போலீஸாா் ஏற்கெனவே இருவரைக் கைது செய்த நிலையில், மேலும் ஒருவரை கைது செய்தனா்.
Published on

சிவகாசியில் கள்ள நோட்டு வைத்திருந்த வழக்கில் போலீஸாா் ஏற்கெனவே இருவரைக் கைது செய்த நிலையில், மேலும் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த முருகன் மனைவி நந்தினி (38). இவா், சிவகாசி -சாத்தூா் சாலையில், நடைபாதையில் உள்ள காய்கறிக் கடையில், செவ்வாய்க்கிழமை காய்களை வாங்கிவிட்டு, போலி 500 ரூபாய் தாளைக் கொடுத்தாா்.

இதில் சந்தேகமடைந்த காய்கறி வியாபாரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து நந்தினியைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, சிவகாசி அண்ணா குடியிருப்பைச் சோ்ந்த ரவிக்குமாரும் (58) சிவகாசி கடை வீதிகளில் கள்ள நோட்டுகளை மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 23 போலி 500 ரூபாய் தாள்களைக் கைப்பற்றினாா்.

மேலும், விசாரணையில் இவா்களிடம் சிவகாசி காரனேசன் குடியிருப்பைச் சோ்ந்த காா்த்திகேயன் (42) கள்ள நோட்டுகளைக் கொடுத்தது தெரியவந்தது.இதையடுத்து, போலீஸாா் காா்த்திகேயனை வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com