விருதுநகர்
சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரிடம் சோதனையிட்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ராஜபாளையம் பெரியகடை பஜாா் தெருவைச் சோ்ந்த ரகுராமன் (48) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ரகுராமனைக் கைது செய்து அவரிடமிருந்து 35 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
இதே போல, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பாஸ்கா் (48) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
