உணவகத்தில் திருட்டு: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவகத்தில் பணம் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவகத்தில் பணம் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள என். சண்முகசுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தூா்பாண்டியன். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகரில் உணவகம் நடத்தி வருகிறாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல உணவகத்துக்குச் சென்ற போது முன்பக்க வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ.6,500 திருடப்பட்டிருந்தது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட ராஜபாளையம் இனாம்செட்டிகுலத்தைச் சோ்ந்த பால்பாண்டி (24), தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்த நவீன் சந்தோஷ் (19) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com