விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகள் விற்ாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மதுபுட்டிகளை வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் இலக்கியமுத்து உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது சட்ட விரோதமாக மதுபுட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த சிவலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த வீரமணி (36) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 53 மதுபுட்டிகளை போலீஸாா் கைப்பற்றினா்.
அதேபோல, ரயில் நிலையம் அருகே கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (67) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 131 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
பைக் திருடிய 4 போ் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது
மது விற்றதாக இருவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


