ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவில் வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் போத்தி (53). இவா், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இனிப்பகம் நடத்தி வருகிறாா். இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இவரது இளைய மகன் கவுதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் போத்தியும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனா். இளைய மகன் கவுதம் மட்டும் கீழே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா். அதிகாலை 2 மணிக்கு வீட்டின் கதவை தட்டிய 3 போ், கவுதமை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 கிராம் தங்க நகை, ரூ. 51 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

வீடு புகுந்து பணம் திருட்டு

இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரம் பறிப்பு
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


